நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி

சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லி ஜந்தர் மந்தர் சென்றது குறித்து...

News image

ஜந்தர் மந்தரில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் செய்தியார்களை சந்தித்த கனிமொழி - எக்ஸ்

Updated On :22 ஜூலை 2026, 6:30 pm IST

நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடங்கிய போராட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்ந்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி இன்று (ஜூலை 22) தெரிவித்தார்.

மாணவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வுக்கு எதிராக யார் போராடினாலும் திமுக துணை நிற்கும் எனவும் குறிப்பிட்டார்.

நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இளைஞர்கள் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இளைஞர்களுடன் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களுடன் கனிமொழி பேசியதாவது:

''திமுக சார்பிலும் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பிலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்களுடன் போரட்டத்தில் கலந்துகொண்டுள்ளோம்.

நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வாய்ப்பு வசதிகள் இல்லாத, ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு. பலமுறை அதை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளோம். போராட்டம் நடத்தியுள்ளோம்.

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், ஆளுநர் அதற்கு கையெழுத்துபோடாததால், இன்று இந்த அளவுக்கு போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியவர்கள் நாங்களாக இருந்தாலும், யார் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடினாலும் துணை நிற்போம்.

மிகப்பெரிய வன்முறை போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் யாரும் இப்படி நடந்துகொள்ளமாட்டார்கள்'' என கனிமொழி குறிப்பிட்டார்.

Summary

NEET Protest DMK started it it continues in Delhi after 10 years Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.