FOLLOW US

ON GOOGLE DISCOVER

தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய்யுடன் பாடகர் அறிவு சந்திப்பு!

நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டு கைதான நிலையில் முதல்வர் விஜய்யை பாடகர் அறிவு சந்தித்தது பற்றி...

News image

பாடகர் அறிவு - X

Updated On :21 ஜூலை 2026, 3:31 pm IST

முதல்வர் விஜய்யுடன் பிரபல பாடகர் அறிவு சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.

'தெருக்குரல் அறிவு' என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் அறிவரசு கலைநேசன், இன்று (ஜூலை 21) பிற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பாக வந்து திடீரென முழக்கமிட்டார்.

"நீட் தேர்வை தடை செய்ய வேண்டும், அதுகுறித்து முதல்வர் பேச வேண்டும்" என்று முழக்கமிட்டார்.

இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். கைதாகும்போதும் பாடகர் அறிவு முழக்கமிட்டுக்கொண்டே சென்றார்.

இதன் தொடர்ச்சியாக முதல்வர் விஜய்யைச் சந்திக்க பாடகர் அறிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை வாகனத்திலேயே அவர் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்திக்க அவர் செல்லும் விடியோ வெளியாகியுள்ளது. இதனால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும் கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மாணவர்கள் மீது தில்லி காவல்துறை தடியடி நடத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாடகர் அறிவு முழக்கமிட்டுள்ளது தமிழகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'என்ஜாய் எஞ்சாமி' பாடலின் மூலமாக பிரபலமான பாடகர் அறிவுதான், தவெக கட்சி கொடிப் பாடலை எழுதி இசையமைத்துப் பாடியது குறிப்பிடத்தக்கது.

Summary

Singer arivu meets CM vijay in TN secretariat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.