5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

ஓசூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை

ஓசூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் மனஅழுத்தம் காரணம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

News image

வெற்றியானந்தம்.

Updated On :21 ஜூன் 2026, 3:31 pm IST

ஓசூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் மனஅழுத்தம் காரணம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பாகலூர் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரியத்தில் குடியிருந்து வருபவர் சின்னசாமி.

இவருக்கு ஜீவானந்தம், வெற்றியானந்தம் என்கிற இரண்டு மகன்களில் இளைய மகன் வெற்றியானந்தம்(20) கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

இதுவரை எழுதிய தேர்வுகளில் தோல்வியடைந்த அவர் இன்று நடைபெறும் நீட் தேர்விலும் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்தில் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.

நேற்று அவரது தந்தை வழக்கம் போல வேலைக்கு சென்று விட, தாயார் கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வீடு திரும்பிய தாயார் மகன் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இறந்த வெற்றியானந்தம் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அதில் இப்படியான பெற்றோர், சகோதரர் கிடைக்க நான் கொடுத்து வைத்தவன்.

நீட் தேர்வு பயம் காரணமான கடந்த ஒரு மாதமாக சரியாக தூங்கவே இல்லை, இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவேன் என்கிற பயத்தில் தவறான முடிவை எடுப்பதாகவும் அம்மா, அப்பா, அண்ணா மன்னித்துவிடுங்கள் என உருக்கமாக கடிதம் எழுத்தி வைத்துள்ளார்.

நேற்று நண்பகல் இறந்த வெற்றியானந்தம் உடல், ஓசூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அட்கோ போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Summary

A student undergoing NEET coaching in Hosur has died by suicide by hanging at his home due to stress.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.