நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், மறைந்த மாணவி அனிதாவை நினைகூருவதாக, கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்தத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அனிதா எனும் மாணவி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில், நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனிதா கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீட் வினாத்தாள் கசிவால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் பெருமளவில் கவனம் பெற்று தற்போது சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவ அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு முதன்முதலில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவை நினைவுகூருவது மரியாதையாக இருக்குமென தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, இன்று (ஜூலை 24) அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“ஆங்கில ஊடகங்கள் நீட் தேர்வு முறையைச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு நபர் மட்டும் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டார். அவர்தான் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவி எஸ். அனிதா.
நீட் எனப்படும் ஒடுக்குமுறை மற்றும் பாகுபாடு கொண்ட மத்திய தேர்வு முறையினால் பலியான முதல் நபர் அவர்தான். இந்தத் தருணத்தில் அவரை நினைவுகூர்வது மரியாதையாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.
Summary
Amidst the outbreak of protests against the NEET exam, Carnatic musician T.M. Krishna has expressed that he is remembering the late student Anitha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்கள் தாக்கப்படும் விடியோக்களை முதல்வர் பார்க்கவில்லையா? - பா. ரஞ்சித் கேள்வி!

நீட் ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டார்கள்: இயக்குநர் அமீர்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்! வெற்றிமாறன், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்பு!

வெறும் 37 நாள்கள்.. 12 நீட் தேர்வர்கள் தற்கொலை! யார் பொறுப்பேற்பார்கள்?
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay




