‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

நீட் ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டார்கள்: இயக்குநர் அமீர்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் அமீர் பேச்சு...

News image

இயக்குநர் அமீர் - (கோப்புப்படம்)

Updated On :23 ஜூலை 2026, 9:02 pm IST

நீட் ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டார்கள் என்று நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராகவும், சிஜேபி இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் சார்பில், தமிழ்த் திரைக்கலைஞர்கள் இன்று (ஜூலை 23) மாலை போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில், இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, அருண் மாதேஸ்வரன், பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர்கள் ஆண்ட்ரியா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் பேசியதாவது:

”ஜனநாயகத்தைக் காப்பாற்ற இங்கே சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிற இதேவேளையில், ஜன நாயகன் திரைப்படத்தைக் காப்பாற்ற ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது

அந்தக் கூட்டம் இதைவிட பெரிய கூட்டமாக இருக்கலாம், ஆனால் இந்தக் கூட்டம், அவர்களைவிட அறிவார்ந்தக் கூட்டம் என்பதை அவர்களுக்கு கூறுகிறேன்.

நீட் தேர்வை கொண்டு வராமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், எங்களிடம் அதற்கான ரகசியம் இருக்கிறது என்று சிலர் கூறுவார்கள். அவர்களும் கொண்டு வரமாட்டார்கள். அவர்களும் ஆட்சியை முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். கடைசிவரை அந்த ரகசியத்தை சொல்லமாட்டார்கள்.

அனிதா மரணத்திற்கு ஆதரவு கொடுக்க வீட்டிற்கு சென்றவர்களும், அதிகாரத்தில் இருப்பார்கள், அவர்களும் செய்யமாட்டார்கள். ஆட்சியாளர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு நிலையைக் கொண்டுவருவார்கள் என நம்புவது ஒரு ஏமாற்றுவேலை.

எந்த அரசும் செய்யாது, எந்தக் கட்சியும் செய்யாது என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். அனைத்துக்கட்சியும் ஒன்று சேர்ந்தால் முடியும், ஆனால் அதை அவர்கள் செய்யமாட்டார்கள். அவர்களுக்கு அரசியல் என்பது பிழைப்புவாதம், அதை அவர்கள் தொடர்ச்சியாக செய்வார்கள்” என்றார்

Summary

Director Ameer spoke at a protest against the NEET exam in Chennai, stating that no one would reveal the secrets behind NEET.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.