உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு!

நீட் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

நீட் தோ்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக ஜந்தா் மந்திரில் கரபான்பூச்சி ஜனதா கட்சி  போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா்.

நீட் போராட்டம் - ANI

Published On :

நாடு முழுவதும் நீட் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதனை திசை திருப்பும் வகையில், நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுறுமாறு பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மத்திய அரசு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறது.

2026 நீட் இளநிலைத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த நீட் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையிலும் பாராட்டும் வகையிலும் போஸ்டர்களைத் தயாரித்து ஷேர் செய்யுமாறு தில்லி பல்கலை, ஜவகர்லால் நேரு பல்கலை உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில், போராட்டக்காரர்களை அழைத்துப் பேசி, நிலைமையை சரி செய்ய மத்திய அரசு முயற்சிக்காமல், நீட் சாதனையாளர்களைக் கொண்டாடி போஸ்டர்களை வெளியிட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பவே மத்திய அரசு முயல்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு மத்திய அரசு வலியுறுத்தி மின்னஞ்சல் அனுப்பியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.