நாடு முழுவதும் சுமார் 22.7 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதும் நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) தொடங்கியது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள், தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மறுதேர்வு இன்று நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டிருந்தது.
இந்த மறுதேர்வை முறைகேடுகளின்றி நடத்துவதற்காக அரசு பல்வேறு விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் மறுதோ்வு மாலை 5.15 மணிக்கு நிறைவடையும்.
ஏற்கெனவே, நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் கசிந்ததால், டெலிகிராம் செயலி முடக்கம், வினாத்தாள்கள் ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்று விநியோகம் செய்தல் போன்ற முக்கிய நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
The NEET exam, being taken by over 2.27 million candidates across the country, began on Sunday (June 21).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










