திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

நீட் மறுதேர்வு: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!

தமிழகத்தில் நீட் மறுதேர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :20 ஜூன் 2026, 12:43 pm IST

நீட் மறு தேர்வை எந்த குளறுபடியும் இன்றி முறையாக நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்ததையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை (ஜூன் 21) நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடத்தப்படுகிறது. இந்த மறுதேர்வை எழுத 22.79 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இதில் தமிழ்நாட்டில் நீட் மறுதேர்வை 1.42 லட்சம் பேர் எழுத உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பிக் கொடுத்ததுடன் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் மறுதேர்வை பாதுகாப்பாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் நீட் மறுதேர்வு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் முக்கிய உத்தரவிட்டுள்ளார்.

தேர்வு மையங்களில் எந்த குளறுபடியும் இன்றி நீட் மறுதேர்வை முறையாக நடத்த வேண்டும் என்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வழியாக தலைமைச் செயலர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார்.

Summary

NEET Re-exam: Tamilnadu Chief Secretary Order to District Collectors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.