தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயுஎம்எல்!

திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) விலகுவதாக அறிவிப்பு...

News image

ரமலான் நோன்பு திறப்பு நிகழ்வில் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 1:55 pm IST

திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) விலகுவதாக கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்ற நிலையில் தேர்தலுக்குப் பின், தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ளது.

ஐயுஎம்எல் பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அதேபோல சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில், வாணியம்பாடி எம்எல்ஏவும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவருமான எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா இடம்பெற்றார்.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐயுஎம்எல்) விலகுவதாக கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் பயணிக்க முடியாது என்றும் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசித்துதான் முடிவெடுத்ததாகவும், தற்போது தவெக நல்லாட்சி தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Summary

IUML withdraws from the DMK alliance

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.