நீட் மறுதேர்வை மாணவர்கள் அச்சமின்றியும் பதற்றமின்றியும் எழுத வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்தத் தேர்வானது ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு இன்று நடைபெற உள்ளது.
இதுகுறித்து தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
இன்னும் சிறிது நேரத்தில், இன்று சுமார் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதப் உள்ளனர். அவர்கள் அச்சமின்றியும், பதற்றமின்றியும் தேர்வை எழுத வேண்டும். அவர்கள் நிச்சயமாக சிறப்பாக எழுதுவார்கள். மாணவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
தயவுசெய்து இந்தியாவின் புதிய தலைமுறையின் எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள். சிறுவர்களின் மனநலத்தைப் பாதிக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். இன்னும் சில மணி நேரங்களில், தேர்வர்கள் தேர்வு எழுதச் செல்வார்கள் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Union Education Minister Dharmendra Pradhan urged students on Sunday (June 21) to take the NEET re-examination without fear or anxiety.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!

தர்மேந்திர பிரதான் ராஜிநாமாவை வரவேற்கிறேன்: அமைச்சர் நிர்மல் குமார்

அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!

மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படுவாரா?
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



