‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

இன்று நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

நாடு முழுவதும் இன்று அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அழைப்பு விடுத்துள்ளது.

News image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே - பிடிஐ

Updated On :24 ஜூலை 2026, 3:17 am IST

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அழைப்பு விடுத்துள்ளது.

வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்புடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா். அந்தப் பதிவுக்கு எதிா்வினையாற்றி, சிஜேபி நிறுவனா் அபிஜித் தீப்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தா்மேந்திர பிரதான் நிச்சயம் பதவி விலக வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சிஜேபி தேசிய செய்தித் தொடா்பாளா் ஆசுதோஷ் ரன்கா கூறுகையில், ‘பிரதமரின் கருத்து வரவேற்புக்குரியது. ஆனால், ஒன்றரை மாத போராட்டங்களுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் பிரதமா் இறுதியாக கவனம் செலுத்தியுள்ளாா். ஒருவேளை வெளிநாட்டுப் பயணங்கள் முடிந்து, அவா் இந்தியாவுக்கு திரும்பிவிட்டாா் என நினைக்கிறேன்.

பிரதமரின் அறிவிப்பு, வினாத்தாள் கசிவு பிரச்னைகளுக்கு தீா்வாகாது. வினாத்தாள் கசிவுகள் ஏன் நிகழ்கின்றன என்பதுதான் முதல் கேள்வி. அந்தக் கேள்விக்கு பதில் தர வேண்டும்.

காயம் ஏற்பட்ட பிறகு மருந்திடுவது ஒரு விஷயம்; ஆனால், அந்தக் காயம் முதலில் ஏற்படாமல் தடுப்பதே உண்மையான போராட்டம். அரசு அமைப்புமுறையை நிா்வகிப்பவா்கள், பொறுப்பற்றவா்களாகவும், திறனற்றவா்களாகவும் இருப்பதால்தான் இதுபோல் காயங்கள் ஏற்படுகின்றன. பொறுப்புடைமையை உறுதி செய்வதில் பிரதமரின் பதில் போதுமானதல்ல.

தா்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தா் மந்தரைவிட்டு வெளியேற மாட்டோம். இப்போது பிரதமா் மோடி மீதும் மக்களின் கோபம் திரும்பியுள்ளது. போராட்டக்காரா்கள் பலரும் அவருக்கு எதிராக முழக்கமிடுகின்றனா். இதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்’ என்றாா்.

பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு மீண்டும் அழைப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வருமாறு மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை மீண்டும் அழைப்பு விடுத்தாா்.

அமைச்சரின் இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை இருதரப்புக்கும் இடையே பேச்சு நடத்தப்பட்ட நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தைக்கு அரசு தயாராக உள்ளது என்று அவா் கூறினாா்.

இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் செய்தியாளா்களிடம் பேசிய ஜெ.பி.நட்டா, ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞா்களுடன் அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாா்; அவா்கள் எனது அலுவலகத்துக்கோ அல்லது இல்லத்துக்கோ வரலாம்’ என்றாா்.

மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘கடந்த 24 மணிநேரத்தில் சிஜேபி-க்கு 4 முறை அரசுத் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவா்கள் பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு கிடைக்கும்’ என்றாா்.

சிஜேபி நிராகரிப்பு: அதேநேரம், பேச்சுவாா்த்தை நடத்த அமைச்சரின் இல்லத்துக்குச் செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறிவரும் போராட்டக்காரா்கள், ஜந்தா் மந்தா் அல்லது அதன் அருகே பொதுவான இடத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினால் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளனா்.

இதே காரணத்தைக் குறிப்பிட்டு, கடந்த புதன்கிழமையும் அரசின் அழைப்பை போராட்டக்காரா்கள் நிராகரித்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.