தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல் இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

அமைதிப் போராட்டத்தை ஒடுக்குகிறது மத்திய அரசு: வாங்சுக் விவகாரத்தில் காங்கிரஸ்!

வாங்சுக் மீது நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையை காங்கிரஸ் விமர்சித்துள்ளது தொடர்பாக..

News image

பவன் கேரா - file photo

Updated On :18 ஜூலை 2026, 12:59 pm IST

வாங்சுக் மீதான காவல் துறையின் நடவடிக்கையானது அமைதியான போராட்டத்தை மத்திய அரசு நசுக்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதைக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதியில் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் ஜூன் 28 ஆம் தேதியில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், வாங்சுக்குவின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவுத் தலைவர் பவன் கேரா கூறுகையில்,

அமைதியான போராட்டம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை ஜனநாயக உரிமை அல்ல, மாறாக நசுக்கப்பட வேண்டிய சட்டம்-ஒழுங்குப் பிரச்னை என்ற அரசின் மனநிலையை இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாக அக்கட்சி குற்றம் சாட்டியது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடானது, ஜனநாயகமற்ற மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான அரசியல் கட்சியால் ஆளப்படுவது வெட்கக்கேடானது. அரசியலமைப்புச் சட்டம் கருத்து வேறுபாடு தெரிவிக்கும் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், உள்துறை அமைச்சகம் அதை மறுப்பதில் உறுதியாக இருக்கின்றது.

தில்லி காவல்துறை நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த அமைச்சகம் நேற்றுதான் தில்லிக்கு புதிய காவல்துறை ஆணையரை நியமித்தது.

இன்றைய ஒடுக்குமுறை நடவடிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்புச் சார்ந்த கடமையை விட அரசியல் ரீதியான கீழ்ப்படிதலுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இன்றைய நடவடிக்கைகள் மத்திய அரசின் மனநிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

The Congress has strongly condemned the forcible shifting of social activist Sonam Wangchuk to a hospital during the protest at Jantar Mantar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.