கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

ஜந்தர் மந்தரில் இருந்து என்னை வெளியேற்றினால்..! 13வது நாளாக சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்!

நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வலியுறுத்தி ஆர்வலர் சோனம் வாங்சுக் 13 ஆவது நாளாக உண்ணாவிரதம்...

News image

13 ஆவது நாளாக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்... - Instagram/CJP

Updated On :10 ஜூலை 2026, 1:09 pm IST

நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்வலர் சோனம் வாங்சுக் 13 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில், லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் கடைபிடித்து வருகிறார். மத்திய அரசு நீட் வினாத்தாள் கசிவுக்கு நடவடிக்கை எடுக்கும் வரையில் தனது போராட்டம் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களுடன் இன்று (ஜூலை 10) அவர் பேசுகையில்,

“ஜந்தர் மந்தரில் இருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டால் அது எனது உரிமைகளை மீறுவதாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

இந்தப் போராட்டம் 21 ஆவது நாளாக இன்றும் நடைபெற்று வருவதால் தில்லி அதிகாரிகள் போராட்டக்காரர்களை வெளியேற்றும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Summary

Activist Sonam Wangchuk is observing a hunger strike for the 13th consecutive day for the NEET question paper leak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.