மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!

தில்லியில் நடைபெற்ற கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்பு...

Sonam wangchuk in CJP protest

தில்லியில் நடைபெற்ற கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்பு... - Instagram/CJP

Published On :

தில்லியில் நடைபெற்ற கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினரின் மாபெரும் போராட்டத்தில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்றுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இளைஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அபிஜித் திப்கே என்பவர் தொடங்கிய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி எனும் சமூக வளைதளப் பக்கம் மாபெரும் இயக்கமாக உருவாகியுள்ளது.

இந்த இயக்கத்தின் சார்பில், நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று (ஜூலை 6) மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அபிஜித் திப்கே உள்பட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டுள்ள இந்தப் போராட்டத்தில், நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தில், லடாக்கைச் சேர்ந்த சமூக மற்றும் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் நேரில் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக, தில்லி போராட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்கள் காவல் துறையினருக்கு மரியாதை நிமித்தமாக, பூக்களை வழங்குங்கள் என அபிஜித் திப்கே அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, போராட்டத்தில் பங்கேற்க கையில் ரோஜா பூவுடன் சோனம் வாங்சுக் வருகை தந்த விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Summary

Social activist Sonam Wangchuk participated in the massive protest held in Delhi by the 'Cockroach People's Party'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.