ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

உண்ணாவிரதத்தைக் கைவிடுவாரா சோனம் வாங்சுக்? மிகுந்த வலியால் அவதி!

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் நிகழ்ந்து வரும் போராட்டம் பற்றி...

Sonam Wangchuk and Abhijit Dipke at the protest site.

போராட்டகளத்தில் சோனம் வாங்சுக், அபிஜீத் தீப்கே. - படம் - எக்ஸ்

Updated On :

17 வது நாளாக உண்ணாவிரதத்தில் நீடிப்பதன் காரணமாக மிகுந்த வலியால் அவதிப்படும் சோனம் வாங்சுக் போராட்டத்தைக் கைவிடவும் மறுக்கிறார்.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில், லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 தொடங்கி இன்று வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சோனம் வாங்சுக் 17 வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய தசைகள் சுருங்கி வருகிறது. எல்லோரையும் போல உண்ணாவிரதத்தை முடித்து கொள்ளும்படி நானும் அவரிடம் கெஞ்சினேன். அவர், “உண்ணாவிரதத்தை முடிக்கும்படி என்னிடம் கேட்காதீர்கள். அரசாங்கம் ஏன் இதுவரை ஒரு பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை” என்று அவர்களிடம் கேளுங்கள் என சோனம் வாங்சுக் கூறியதாக அபிஜீத் தீப்கே குறிப்பிட்டுள்ளார்.

Summary

Sonam Wangchuk, suffering from severe pain as he continues his hunger strike for the 17th day, refuses to call off the protest.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.