பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

லண்டனில் பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க. ஸ்டாலின்!

பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளது பற்றி...

News image

பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க. ஸ்டாலின். - X

Updated On :14 ஜூலை 2026, 12:42 pm IST

லண்டனில் தனது பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.

மு.க. ஸ்டாலினின் பேரனும் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, பிரிட்டனின் மான்செஸ்டா் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடா்பான உயா்கல்வி பயின்று வருகிறாா்.

அவரது பட்டமளிப்பு விழா இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றுள்ளார். மு.க.ஸ்டாலினுடன், அவரது மனைவி துா்கா, உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா மற்றும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் குடும்பத்தினரும் சென்றுள்ளனா்.

சுமாா் 10 நாள்கள் லண்டனில் ஓய்வெடுக்கவும் ஜூலை 20-ஆம் தேதிக்குப் பிறகு அவா் சென்னை திரும்புவாா் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் இன்பநிதியை மு.க. ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்துத் தெரிவித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary

M.K. Stalin at grandson Inbanidhi graduation ceremony

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.