30 - 35 வயதுக்குப் பிறகு பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதாகவும் அதனால் பெண்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நடிகை ஜோதிகா சமீபமாக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்தார். அவரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. அவர், 'உடல் எடையைக் குறைப்பதைவிட தசை இழப்பைச் சரிசெய்யவும் உடல் வலிமைக்காகவும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.
மேலும் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளையும், அதிக புரதச்சத்து கொண்ட உணவையும் எடுத்துக்கொண்டதாகவும் கூறினார்.

உடற்பயிற்சி செய்யும் ஜோதிகா. - படங்கள்: இன்ஸ்டா/ ஜோதிகா
தசை இழப்பு
பெண்களுக்கு சாதாரணமாகவே 30 வயதுக்கு பிறகு தசை இழப்பு ஏற்படும். இது 35 வயதுக்குப் பிறகும் குறிப்பாக மெனோபாஸ் நேரத்தில் அதிகமாகும். உடலில் உள்ள தசைகள் குறைந்து வலிமை இழப்பதே தசை இழப்பு ஆகும்.
ஆண்டுக்கு 1 முதல் 2% என்ற அளவில் பெண்களின் உடலில் தசை இழப்பு நடைபெறும். 60 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு 3% என்ற அளவில் இருக்கும்.
ஒவ்வொருவரின் உடல்நிலை, எடுத்துக்கொள்ளும் உணவைப் பொறுத்து இது லேசானதாகவோ தீவிரமாகவோ இருக்கலாம்.
எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
இதனைச் சரி செய்வதற்கு புரதசத்து, கால்சியம், ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த உணவைச் சாப்பிடுவது அவசியம்.
அந்தவகையில் பன்னீர், முட்டை, சிக்கன், பருப்பு வகைகள், பீன்ஸ் ஆகிய புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
அதேபோல இரும்புச் சத்துக்கு கீரை வகைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி -க்கு தினமும் சிறிது நேரம் காலை சூரிய ஒளியில் இருக்க வேண்டும் அல்லது மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
பால், தயிர் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த உணவுகளும் அவசியம்.
நட்ஸ் வகைகளில் பாதாம், வால்நட் ஆகியவற்றை ஊறவைத்து காலையில் சாப்பிட வேண்டும்.
விதைகளில் ஆளி விதைகள், பூசணி விதைகள் - ஹார்மோன் மாற்றங்களுக்கு பெரிதும் உதவுகின்றன.
கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இது உடல் வலிமையை அதிகப்படுத்தும், உடல் எடையை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும், ஹார்மோன் மாற்றங்களைச் சரிசெய்யும். ஒட்டுமொத்தமாக தசை இழப்பைச் சரிசெய்யும்.
உடற்பயிற்சியும் அவசியம்
சத்தான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதுடன் உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். இதனைச் செய்யாவிட்டால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இதனாலேயே பெண்களுக்கு சோர்வு, மூட்டு வலி, இடுப்பு மற்றும் முதுகு வலி ஆகியவை ஏற்படுகிறது. அதேபோல மெனோபாஸ் நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கும் 35 வயதுக்கு மேலாக தசை இழப்பு இருக்கும். ஆனால் பெண்களுக்குதான் அதிக பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல பெண்களுக்கு 40 வயதுக்குப் பிறகு எலும்பு வலுவிழக்கத் தொடங்கும் என்பதால் உடல்நிலையைக் கவனத்தில்கொள்ள வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
Summary
women facing sarcopenia after 30 age, Is this what actress Jyothika said
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









