அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

ஃபிட் ஆக இருப்பது எப்படி? நடிகர் அதர்வா பதில்!

நடிகர் அதர்வா உடல் தோற்றம் குறித்து பேசியுள்ளார்...

News image

நடிகர் அதர்வா

Updated On :9 ஜூலை 2026, 4:15 pm IST

நடிகர் அதர்வா ஃபிட் ஆக இருப்பது குறித்து பேசியுள்ளார்.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான டிஎன்ஏ திரைப்படம் விமர்சனம் மற்றும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது. பல ஆண்டுகள் கழித்து அதர்வாவுக்கு வெற்றியைக் கொடுத்து மீண்டும் அவருக்கான மார்க்கெட்டையும் வழங்கியது.

ஆனால், தொடர்ந்து வெளியான தணல் மற்றும் பராசக்தி எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. தற்போது, ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்த இதயம் முரளி நாளை (ஜூலை 10) வெளியாகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய அதர்வாவிடம் உடலைக் கச்சிதமான தோற்றத்தில் வைக்க என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா, “நான் அடிக்கடி உணவுப்பழகத்தை மாற்ற மாட்டேன். ஒரே வகை உணவுகளை நீண்ட காலம் சாப்பிடுவேன். காலையில் வேக வைத்த முட்டைகளைச் சாப்பிட்டு வந்தேன். தற்போது, பழைய சோறு சாப்பிடுகிறேன். மதியம் சிக்கன், காய்கறி வகைகள், இரவு எப்போதும் எனக்குப் பிடித்த தோசை சாப்பிடுவேன். ஆனால், இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஈட்டி திரைப்படத்தில் கடுமையாக உழைத்து சிக்ஸ்பேக் உடற்கட்டை அதர்வா கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Actor Atharvaa has spoken about staying fit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.