டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

நடிகர் பிருத்விராஜ் வாரணாசி திரைப்படத்தைப் புகழ்ந்துள்ளார்...

News image

நடிகர் பிருத்விராஜ்

Updated On :25 ஜூன் 2026, 1:35 pm IST

நடிகர் பிருத்விராஜ் வாரணாசி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என பிருத்விராஜ் மலையாள சினிமாவின் முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். இவர் இயக்கிய எம்புரான் மிகப் பெரிய வணிகத்தைச் செய்ததுடன் மலையாளத்தில் எடுக்கப்பட்ட அதிக பட்ஜெட் திரைப்படம் என்கிற பெயரையும் பெற்றது.

தற்போது, பிருத்விராஜ் இயக்குநர் ராஜமௌலியின் வாரணாசி மற்றும் ஐ நோபடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் பிருத்விராஜ், “வாரணாசி போன்ற திரைப்படங்களை உருவாக்கும் போது, பிரம்மாண்டம் என்பதே குறைவாகக் கணக்கிடுவதுதான். இதற்கு முன் இப்படியொரு படத்தை நான் பார்த்ததில்லை. இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியும் இதையே என்னிடம் சொன்னார். எனக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தாலும் ராஜமௌலி அதனைக் கேட்டு தன் கருத்தைச் சொல்வார்.

30 ஆண்டுகளாக காத்திருந்து தன் முதல் திரைப்படத்தை இயக்கும் இயக்குநராக ராஜமௌலி இப்படத்தில் கடுமையாகப் பணியாற்றி வருகிறார். எங்களுக்கு காலை 7 மணிக்கு முதல் ஷாட் என்றால், அவர் அதிகாலை 5 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தன் உதவி இயக்குநர்களுடன் ஒத்திகைகளைப் பார்த்துக்கொண்டிருப்பார்.

முதல் படத்தை இயக்கும் இயக்குநருக்கு இருக்கும் உழைப்பு இப்போதும் அவரிடம் இருக்கிறது. வாரணாசி கதையை என்னிடம் அவர் சொன்னபோது, குறிப்பிட்ட காட்சியைச் சொல்லி எப்படி இதை எடுப்பீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘எனக்கும் தெரியாது. ஆனால், கண்டுபிடிப்போம்’ என்றார். படப்பிடிப்பின் போது அதனை மிகச் சிறப்பாகவும் எடுத்தார். ஒரு நடிகராக, இயக்குநராக, மனிதனாக வாரணாசி படத்தின் மூலம் செழுமையடைந்து வருகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Prithviraj has spoken about the movie Varanasi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.