அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

உடல் எடையைக் குறைக்கும் ஆளி விதைகள்! எவ்வளவு சாப்பிட வேண்டும்?

ஆளி விதைகளின் பயன்கள், அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :22 ஜூன் 2026, 3:17 pm IST

ஆளி விதைகள் உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமின்றி உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, லிக்னான்கள் என ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர் உணவுதான் ஆளி விதைகள். மாங்கனீஸ், மெக்னீசியம், காப்பர், பாஸ்பரஸ், தையமின் ஆகிய தாதுக்களும் உள்ளன.

கலோரி எவ்வளவு?

  • ஒரு டேபிள் ஸ்பூன் (10 கிராம்) ஆளி விதையில் உள்ள கலோரி அளவு 55 கிராம்.

  • நீர்ச்சத்து - 7%,

  • புரதம் - 1.9 கிராம்

  • ஒமேகா-3 அமிலம் - 2.8 கிராம்

  • கார்போஹைடிரேட் - 3 கிராம்

  • சர்க்கரை - 0.2 கிராம்

  • கொழுப்பு - 4.3 கிராம்.

உடல் எடையைக் குறைப்பது எப்படி?

இது முக்கியமாக உடலில் செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.

மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும் தன்மை கொண்டது. இதனால் உடலில் எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது. இதனால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.

ஆளி விதைகளில் உள்ள நல்ல கொழுப்பு, உடலுக்குத் தேவையானதும்கூட.

இதர பயன்கள் என்ன?

  • உடலில் கொழுப்புகளைக் குறைப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது.

  • ரத்த சர்க்கரையின் அளவையும் சமநிலைப்படுத்துகிறது.

  • இதன் எதிரொலியாக இதய ஆரோக்கியம் மேம்படும், இதய ஆரோக்கியத்திற்கு ஆளி விதையை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

  • அதுமட்டுமின்றி டைப் 2 நீரிழிவு, புற்றுநோயைக் குறைக்கும் தன்மை கொண்டது.

  • ஹார்மோன்களைச் சமநிலைப்படுத்தவும் உதவும்.

  • குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.

  • ரத்த அழுத்தம், அழற்சியைக் குறைக்கும், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகமிருப்பதால் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.

கோப்புப் படம்

கோப்புப் படம் - ENS

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, உடல் எடையைக் குறைக்கும் என்பதால் அதிகம் சாப்பிடக் கூடாது, அளவாகச் சாப்பிட்டால் நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதுவும் முதலில் சாப்பிட ஆரம்பிக்கும்போது மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். படிப்படியாக ஒரு ஸ்பூன் அளவுக்கு அதிகரிக்கலாம். உடல்ரீதியாக பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பின்னர் சாப்பிடுவது நல்லது.

எப்படி சாப்பிட வேண்டும்?

ஆளி விதையை அப்படியே சாப்பிடக் கூடாது. ஆளி விதையின் முழு நன்மையை, அதாவது முழு சத்துகளைப் பெற அவற்றை அரைத்துப் பொடியாக பயன்படுத்துவது நல்லது. பொடியை அப்படியே சாப்பிடாமல் நீராகாரங்களில் கலந்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். சிறிதளவு பொடி கலந்தாலே தண்ணீர் அடர்த்தியாகிவிடும். அதனால் அதிக தண்ணீர் கலந்து திரவமாக அருந்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஓட்ஸ், ஸ்மூத்தி, பழச்சாறுகள், தயிர், சாலட் ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம்.

மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் ஆளி விதைகள், முழு விதைகளாகவோ, பொடியாகவோ, வறுக்கப்பட்ட நிலையிலோ விற்கப்படுகின்றன. ஆளி விதை எண்ணெயாகவும் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறது.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

Nutrition facts and health benefits of flax seeds, how to use for weight loss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.