ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குழந்தை சாப்பிட அடம்பிடிக்கிறதா? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

குழந்தைகளை சாப்பிட வைக்க சில டிப்ஸ்...

Does the children struggle to eat, Follow these 10 tips

கோப்புப் படம் - ENS

Published On :6 ஜூலை 2026, 1:31 pm IST

இந்த கால குழந்தைகளை வளர்ப்பது, அதுவும் குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இப்போதுள்ள குழந்தைகள் எல்லாம் டிவி, போன் இல்லையென்றால் சாப்பிட மறுக்கிறது.

என்னதான் வெளியில் சென்று சாப்பாடு ஊட்டினாலும் எப்போதோ ஒருமுறை போன் அல்லது டிவியைக் காண்பித்து உணவு ஊட்டும்போது, குழந்தை அதற்கு பழக்கமாகிவிடுறது. முற்றிலும் போன் அல்லது டிவியைக் காட்டாமல் இனி குழந்தைகளை வளர்க்க முடியாது என்பதே இன்றைய பெரும்பாலான பெற்றோர்களின் கருத்தாக இருக்கிறது.

எனினும் 2 வயதுக்குள் குழந்தைகளுக்கு போன், டிவி காண்பிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதன்பின்னரும் தினமும் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் மட்டுமே போன், டிவி காட்ட வேண்டும், அதற்கு மேல் காட்டினால் குழந்தைகளின் அறிவாற்றல், வளர்ச்சி சார்ந்த விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.

இன்னும் சில குழந்தைகள் போன், டிவி காட்டினாலும் சாப்பிட மறுக்கிறார்கள். அவர்கள் சில டிப்ஸ்களைப் பின்பற்றலாம்.

Story image

ENS

குழந்தைகளை சாப்பிட வைக்கும் சில வழிமுறைகள்!

1. முதலில் குழந்தைகளுக்கு நல்ல செரிமானம் ஆகக்கூடிய உணவுகளைக் கொடுக்க வேண்டும். உணவுகளில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். ரசம், கூட்டுகளில் இந்த பொருள்களைச் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அப்போதுதான் குழந்தைகளுக்கு பசி எடுக்கும், சாப்பிடத் தொடங்கும்.

ரொட்டி, பன், பட்டர் ஜாம், நூடுல்ஸ், பிஸ்கட், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. முடிந்தவரை தினமும் ஒரே நேரத்தில் சாப்பாடு கொடுத்து பழகுங்கள். அது குழந்தைகளுக்கு படிப்படியாக சாப்பிடுவதற்கு உதவும்.

3. உணவைக் கட்டாயப்படுத்தி வாயில் திணிக்க வேண்டாம். அது உணவின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யுங்கள்.

4. குழந்தைகள் நன்றாக மலம் கழித்த பிறகு ஓரளவு சாப்பிடுவார்கள். எனவே அதையும் கவனிக்கவும்.

5. குழந்தைகளுக்கு பிடிக்காத உணவு, அதேநேரத்தில் சத்தான உணவு என்றால் அவர்களுக்கு பிடித்த வகையில் செய்து படிப்படியாக முயற்சி செய்யுங்கள். ஒரு சுவையை அடிக்கடி கொடுக்க நாளடைவில் சாப்பிடுவார்கள்.

6. குழந்தைகள் மிகவும் பொறுமையாகவே சாப்பிடுவார்கள். எனவே, பொறுமை அவசியம். அதேநேரத்தில் உணவளிக்கும் நேரம் அரை மணி நேரத்தைத் தாண்ட வேண்டாம். 20 நிமிடங்களுக்குள் சாப்பிடுவது நல்லது.

7. கண்டிப்பாக குழந்தைகள் சாப்பிடும்போது டிவி, போன் தவிருங்கள். அவர்களுக்கு பிடித்த பொருள்களை வைத்து விளையாட்டு காண்பித்தோ, வெளியில் கூட்டிச் சென்றோ சாப்பிட வைக்க முயற்சியுங்கள்.

8. குழந்தைகள் ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துக் கொடுங்கள்.

9. அதேபோல குழந்தைகளை அவர்களே கையில் எடுத்து சாப்பிட பழக்குங்கள். அதுவும் உணவின் மீதான ஆர்வத்தைத் தூண்டும்.

10. ஒரு நாளில் ஒரு நேரமாவது குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும். முதலில் கடினமாக இருந்தாலும் படிப்படியாக குழந்தைகளை சாப்பிடத் தூண்டும்.

2 - 3 வயது குழந்தைகளுக்கு நீங்கள் உணவை ஊட்டலாம். அதன்பிறகு அவர்களையே சாப்பிட வைப்பதுதான் நல்லது. குழந்தைகளுக்கு ஊட்டியே பழக்கப்படுத்துவது நல்லதல்ல என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள்.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

Does the children struggle to eat, Follow these 10 tips

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.