தமிழ்நாட்டில், திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை தவெக ஆட்சியிலும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. ஆனால், தவெக அறிவித்த ரூ.2500 எப்போது என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம் கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் ரூ.1000, மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ரூ.1.30 லட்சத்துககும் அதிகமான பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்று வருகிறார்கள்.
தவெக தேர்தல் வாக்குறுதியில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தவெக தலைவர் விஜய் முதல்வராக முதல் கையெழுத்தே, மகளிர் உரிமைத் தொகை உயர்வுக்கானதாக இருக்கும் என்று, தவெகதான் தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்று வாக்களித்த பல பெண்களின் கனவாக இருந்தது.
ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. எனினும், திமுக அளித்து வந்த ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இந்தத் தொகை உயர்த்தப்படும் என்று பெண்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம், இது குறித்து கேட்டதற்கு, ரூ.2500 தொகை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
தேர்தல் களத்தில் பெண்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் தவெக அரசின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவதறக்ன அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கண்டிப்பாக பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு மக்களிடையே அதிருப்தி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் நல்ல வசதி, தரமான சிகிச்சையை அரசு உறுதி செய்தால் போதும், பிறக்கும் குழந்தைக்கு தரமான சிகிச்சைதான் தேவை, மோதிரமல்ல என்று அரசு மருத்துவமனைக்கு வரும் ஏராளமான கர்ப்பிணிகள் கூறுவதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன.
Summary
Is the women's entitlement allowance only ₹1,000? When will it be ₹2,500? Minister Jagadeeswari shares good news.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









