தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்கள் போன்ற சிறப்புத் திட்டங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி செலவிடப்படுவதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நிதிநிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டு உரையாற்றினார்.
அப்போது அவர் வெளியிட்ட தகவலில், தமிழகத்தின் சிறப்புத் திட்டங்கள் பலவும் உரிய வருவாய் பெருக்க நடவடிக்கை இல்லாமலேயே தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களுக்கான ஆண்டு செலவினம் ரூ.25 ஆயிரம் கோடி. ஆனால், அதற்கு இணையான வருவாய் பெருக்கம் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், நலத்திட்டங்கள் தமிழகத்தின் பெருமைமிக்க பாரம்பரியம். அந்த பாரம்பரியம் தொடரும் என்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் உறுதியளித்திருக்கிறார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ரூ.5 லட்சம் கோடியில் இருந்த கடன் தற்போது ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ.67,050 கோடியை எட்டியிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக உள்ளது என்று வெள்ளை அறிக்கை கூறுகிறது.
முதியோர் சமூகமாக மாறுகிறது தமிழகம்
தமிழகம் மொத்த மக்கள் தொகையில் அதிக முதியோர்களைக் கொண்ட முதியோர் சமூகமாக மாறுகிறது. இதனால், வருவாய் ஈட்டுவோர் குறைந்து, சார்ந்திருப்பவர்கள் அதிகரித்து காணப்படுவர்.
Summary
What is the expenditure for the women's entitlement allowance and free bus travel schemes?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










