ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்புகள்! என்ன, இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?

த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்புகள் பற்றியும் இருவரும் சேர்ந்து நடித்தது பற்றியும்..

News image

த்ரிஷா அம்மா உமா கிருஷ்ணன் பிறந்தநாள் - From video grab

Updated On :6 ஜூலை 2026, 12:12 pm IST

தமிழ் சினிமாவில், தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நடிகை த்ரிஷா, அண்மையில், தன்னுடைய அம்மா உமா கிருஷ்ணனின் 70-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் நாள்தோறும் பதிவிட்டு வரும் நிலையில், த்ரிஷாவின் தாயார் மிகவும் இளமையாக இருப்பதாகவும், இதுதான் த்ரிஷாவின் இளமைக்கும் காரணம் என்று அவரது ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணனுக்கும் ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால், தன்னுடைய குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், அவர் எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

பிறகு, மகள் த்ரிஷாவின் திரைத்துறை வாழ்வுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதும் உமா கிருஷ்ணன்தான்.

ஆனால், பல இயக்குநர்களும் கேட்டு உமா கிருஷ்ணன் நடிக்காத நிலையில் இயக்குநர் ஏ.எல். விஜய் தன்னுடைய விளம்பரப் படம் ஒன்றில், த்ரிஷா - உமா கிருஷ்ணன் இருவரையும் நடிக்க வைத்து வெற்றி பெற்றுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அந்த விளம்பரம், தாய் - மகளை சுற்றி நிகழ்வது போல உருவாக்கப்பட்டிருந்ததால், அதனைச் சொல்லி உமா கிருஷ்ணனை ஒப்புக்கொள்ள வைத்ததாகவும், எப்போதும் கேமராவுக்கு முன்னால் முகம் காட்ட விரும்பாத உமா கிருஷ்ணன், விஜய்-யின் கோரிக்கையை ஏற்று விளம்பரப் படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.

2016-17ஆம் ஆண்டில் இந்த விளம்பரப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பாஸ்மதி அரிசி விளம்பரத்தில் த்ரிஷா - உமா கிருஷ்ணன் ஒன்றாக நடித்திருந்தார்கள். ஒரே விளம்பரத்தை பல மொழிகளில் விஜய் இயக்கியிருந்தார். தமிழில் த்ரிஷா - உமா கிருஷ்ணன் நடித்து வெளியான விளம்பரப்படம் வெகுவாக பலரது கவனத்தையும் ஈர்த்திருந்ததாம்.

இது குறித்து உமா கிருஷ்ணன் அப்போது எடுத்த நேர்காணல் ஒன்றில், தாய் - மகள் கான்செப்ட் என்பதால் எங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. நடிக்க எனக்கு சற்று கடினமாக இருந்தது. ஆனால், த்ரிஷா இருந்ததால் மிகவும் ஜாலியாக நடித்துக் கொடுத்தோம் என்று கூறியிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.

Summary

A film offer for Trisha's mother! Have the two acted together?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.