அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?

திருச்சி கிழக்கில் போட்டியில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

News image

த்ரிஷா - ராகவா லாரன்ஸ்

Updated On :30 ஜூன் 2026, 12:28 pm IST

சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் வெற்றிபெற்று, ராஜிநாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

ஒருசில வாரங்களுக்கு முன்பு, நான் அரசியலுக்கு வரலாமா என்று கேட்டு சமூக வலைத்தளத்தில் ஒரு விடியோ வெளியிட்டிருந்தார் ராகவா லாரன்ஸ்.

இந்த நிலையில், இன்று வெளியிட்டிருக்கும் விடியோவில், தான் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடவில்லை என்று நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் விடியோவில் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டிருக்கும் விடியோவில், இரண்டு விவகாரங்கள் குறித்து தெளிவுபடுத்தவே இந்த விடியோ, ஒன்று திருச்சி கிழக்குத் தொகுதி, மற்றொன்று, செய்தியாளர் சந்திப்பில் நான் சொன்ன ஒரு வார்த்தை சர்ச்சையானது பற்றியும்தான்.

செய்தியாளர் சந்திப்பின்போது நான் சொன்ன தெரு நாய்கள் விவகாரம் சர்ச்சையாகிவிட்டது. அது குறித்து எழுத்துப்பூர்வமாக எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துவிட்டு என் வேலையை பார்க்கச் சென்றுவிட்டேன்.

என்னுடைய நலம் விரும்புவோர் பலரும், தெரு நாய்கள் குறித்து பேசியதற்கு விளக்கமாக விடியோ வெளியிடுமாறு கூறினார்கள்.

பிறகு, அரசியலுக்கு வருவதாக இருந்தால் வர வேண்டியதுதானே? அதனை ஏன் மக்களிடம் கேட்க வேண்டும் என்றும் பலரும் சொல்கிறார்கள். என் சொந்தங்களிடம் நான் கேட்பது போலத்தான் மக்களிடமும் கேட்கிறேன். நீ அறக்கட்டளையை மட்டும் பார், அரசியலுக்கு வர வேண்டாம் என்று மக்கள் நினைத்தால். அதனால்தான் அவர்களிடம் கேட்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது.

மக்களைக் கேட்டு, மரியாதை கொடுத்து அவர்கள் முடிவை கேட்பதில் என்ன தவறு?

நான் மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவில்லை. நாலு பேருக்கு சோறு போட்டேன், நலத்திட்டங்கள் செய்தேன் என்பதற்காக அரசியலுக்கு வருகிறேன் எனறும் சொல்லவில்லை. நான்கு பேருக்கு நல்லது செய்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்றுதான் சொல்கிறேன். இதுவரை வருகிறேன் என்றுகூட சொல்லவில்லை.

ஆனால், அதற்குள் நாலு பேருக்கு சாப்பாடு போட்டுவிட்டு அரசியலுக்கு வர வேண்டும் என்று நான் சொல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் அது போல சொல்லாதீர்கள். எனக்கு மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. முன்போ ஏதோ பேசிவிட்டீர்கள். இந்த விடியோவைப் பாருங்கள். இனியும் அவ்வாறு பேசாதீர்கள்.

அடுத்து திருச்சி கிழக்கு தொகுதி பற்றி சொல்கிறேன். பலரும் திருச்சி கிழக்கில் போட்டியிடுங்கள். நாங்கள் வாக்களிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். படப்பிடிப்புக்குப் போகும்போது, வேறு எங்காவது பார்த்தாலும், வாங்க எம்எல்ஏ சார், திருச்சி கிழக்கில் போட்டியிடப்போகிறீர்களா? என்று சந்தோஷமாக அழைக்கிறார்கள். அன்புக்கு நன்றி.

ஆனால், எது தர்மம் என்று ஒன்று உள்ளது. ஏனென்றால் திருச்சி கிழக்கில் நான் போட்டியிட வேண்டுமா? அல்லது விஜய் சார் எப்போது ஹீரோவானாரோ, அப்போது முதல் ஒருவர் விஜய்க்காக போஸ்டர் ஒட்டியிருப்பாரே, பிறகு விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும், அந்த கட்சிக்காக உழைத்திருப்பார், அவருடன் கட்சியின் தொடக்கத்திலிருந்து வந்தவர்கள் எல்லாம் இருப்பார்கள். அவர்கள் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டுமா? நான் போட்டியிட வேண்டுமா? விஜய் சார் வீட்டில், திருச்சி கிழக்குத் தொகுதிக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்களோ? அவர்கள் நிற்க வேண்டுமா? நான் நிற்க வேண்டுமா? விஜய் சார் யாரை நிறுத்தினாலும் அவர்கள் வெற்றி பெறப்போகிறார்கள்.

அந்த இடத்தில் நான் நிற்க வேண்டும் என்பது தர்மம் இல்லை. ஒருவர் மரத்தை நட்டு வளர்த்து அதில் வரும் பழத்தை நான் சாப்பிடுவது சரியா? அல்லது மரத்தை வளர்த்தவர்கள் சாப்பிடுவது சரியா? என்பதால்தான் இந்த முடிவு.

ஒரு கட்சியில் தொண்டராக இருந்து பணியாற்றி பிறகுதான் தேர்தலில் போட்டியிட வேண்டும். பிறகு, கட்சியின் தலைமை பார்த்து ஒரு பதவி கொடுக்க வேண்டும்.

எனவே, நான் இப்போது முதல்வர் விஜய்க்கு வைக்கப்போவது ஒரே கோரிக்கை. நீங்கள் நினைத்தால் ஆயிரம் குழந்தைகளுக்கு நல்லது செய்ய முடியும். ஆனால் அதற்காக அரசியலுக்கு வர மாட்டேன் என்று வருத்தப்பட வேண்டாம்.

திருச்சி கிழக்குத் தொகுதியில்தான் போட்டியிட மாட்டேன் என்று சொன்னேன். அதுதான் தர்மம் இல்லை என்று சொன்னேன். வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவில்லை. பொறுமையாக நிற்போம். அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாம். மக்கள் பிரச்னைக்காக நிற்போம். எனவே, நிதானமான சிந்தித்து அரசியலுக்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருச்சி கிழக்குத் தொகுதியில் நடிகை த்ரிஷா போட்டியிடுவார் என்று புரளிகள் பரவி வந்தது. ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிடுவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

முதல்வர் விஜய் ராஜிநாமா செய்த தொகுதி என்பதால் திருச்சி கிழக்கு தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. எனவே, இங்கு யார் போட்டியிடுவார்கள்? த்ரிஷா போட்டியிடுவதற்காக ராகவா லாரன்ஸ் போட்டியிடாமல் விட்டுக்கொடுத்திருக்கிறாரா என்றும் மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

Summary

No contest Trichy East Raghava Lawrence stepping aside for Trisha?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.