புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்

கோவை அமுதன் கொலை குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு....

Udhayanidhi Stalin

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - TN

Published On :

கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது கடும் நடவடிக்கை தேவை என பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கோவையில் மாணவன் அமுதன் கொலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்து அதன் மீது உரையாற்றினார்.

அவர் பேசுகையில்,

"கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன.

கோவையில் அமுதன் என்ற மாணவரை 20 பேர் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். கடந்த முறை அவையில் இதைப்பற்றி நான் கேள்வி எழுப்பியபோது அமைச்சர் ராஜ்மோகன் இதனை கோஷ்டி பூசல் என்று கூறினார்.

ஆனால் இது கோஷ்டி பூசல் அல்ல. இது ஒரு படுகொலை. கோவை செட்டிபாளையம் போலீசார், அமுதனை விசாரணைக்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் குறித்து தகவல் பெற்றிருக்கிறார்கள். அந்த தகவலை குற்றவாளிகளிடம் போலீசார் கூறியிருக்கிறார்கள். இதனை அமுதனின் பெற்றோரே சொல்கிறார்கள்.

அரசின் அலட்சியத்தால், காவல்துறையின் பொறுப்பற்ற போக்கால்தான் மாணவன் அமுதன் கொல்லப்பட்டுள்ளார். அமுதனின் பெற்றோர்களும் அதைத்தான் நம்புகிறார்கள். குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை தேவை. போதைப்பொருள் புழக்கம் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு இது எச்சரிக்கையாக இருக்கிறது.

இதேபோல சென்னையைச் சேர்ந்த தனுஷ் என்பவர் போதைப்பொருள் குறித்து தகவல் கொடுத்ததால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று பல கொலைகள் நடந்துள்ளன" என்று பேசினார்.

Summary

Action needed against the police regarding the murder of Kovai Amudhan: Udhayanidhi Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.