
உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்: உதயநிதி பேச்சால் அமளி
திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் வெளியிடுமாறு உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து...
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - Youtube
திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "ஊழல் குற்றச்சாட்டு கோப்புகளை திறந்து காட்டுவதாக முதல்வர் கூறுகிறார். உண்மையான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் இருந்தால், அவர் நடவடிக்கை எடுக்கட்டும் என அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவதுபோல சட்டப்பேரவையில் பேசுவதெல்லாம் ஆகாது. அவர்களின் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்" என்று தெரிவித்தார்.
முதல்வர் மீதான உதயநிதியின் இந்த விமர்சனத்துக்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அமளியிலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "ஊழல் குற்றச்சாட்டு கோப்புகளைக் காட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனை முதல்வர் கட்டாயம் வெளிக் காட்டுவார்" என்று தெரிவித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பதாக தவெகவினர் குற்றம் சாட்டி வரும்நிலையில், அவை குறித்த 3 கோப்புகள் முதல்வரின் மேசையில் இருப்பதாக அமைச்சர் கூறினார். இதனைத் தொடர்ந்து, அவற்றைத் திறந்து காட்ட வைத்துவிட வேண்டாம் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கூறினார்.
இந்த நிலையில், முதல்வரின் எச்சரிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ஆதாரங்களுடன் கோப்புகளை வெளியிடுமாறு கூறியுள்ளார்.
Summary
Release evidence for the corruption allegations against the DMK, says LoP Udhayanidhi Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





