ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

சட்டப்பேரவை நேரலையை எதிர்க்கவில்லை, ஆனால்.... உதயநிதி கோரிக்கையும் ஜேசிடி பிரபாகர் பதிலும்

அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் குறித்து உதயநிதி கேள்வியும் அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பதிலும்...

JCD Prabhakar | Udhayanidhi

சட்டப்பேரவையில் உதயநிதி கோரிக்கையும் ஜேசிடி பிரபாகர் பதிலும் - Youtube

Published On :

சட்டப்பேரவையில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் நேரலையில் ஒளிபரப்பாவது மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இன்றைய சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "சட்டப்பேரவையில் நாங்கள் பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டீர்கள். ஆனால், இவையனைத்தும் நேரலையில் சென்று விட்டது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? சட்டப்பேரவை அலுவல் நேரலையை நாங்கள் எதிர்க்கவில்லை. அது ஒரு நல்ல முயற்சி, அதனை நாங்கள் பாராட்டுகிறோம்.

அவைக்குறிப்பில் நீங்கள் நீக்கியவையெல்லாம் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது" என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், "குற்றச்சாட்டுகளை எந்தப் பக்கம் இருந்து வைத்தாலும், ஆதாரபூர்வமான கருத்துகளைச் சொல்வதன் மூலமாகவே அவையின் குறைந்தபட்ச மாண்பை நாம் காப்பாற்ற முடியும். அதே வேளையில், ஆதாரமற்ற கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டியது என்பது அவையின் மரபு.

இனி வருங்காலத்திலும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது என்பது எனது தனிப்பட்ட உரிமை. ஏனெனில், அவையின் மாண்பை காப்பாற்றியாக வேண்டும்.

மேலும், அவைக் குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்காமல் பேச முயற்சிப்பதும், ஆதாரங்கள் இல்லாமல் பேசாமல் இருப்பது நல்லது. ஏனெனில், இரு தரப்பினரும் ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் பேச வேண்டும் என நானும் மக்களும் விரும்புகிறோம். போகிற போக்கிலே அள்ளித் தெளித்துப் போகிற இடமல்ல இது. இங்கு பேசும்போது அவையின் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டும்.

எல்லா பேச்சுகளை நீக்குவது என்பது எனது நோக்கமல்ல. இருப்பினும், அவைக்குப் பயன்தராத, நம் பண்பாட்டுக்கு உதவாத, அவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய எந்த விஷயமாக இருந்தாலும், அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவேன்" என்று தெரிவித்தார்.

Summary

LoP Udhayanidhi questions the remarks to be expunged from the House records; Assembly Speaker JCD Prabhakar responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.