
சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்!
சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்படுத்தப்பட்டுள்ளது பற்றி...

சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்... - X
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைதாகியுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி, சென்னை போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் ஜெம் கிரானைட் நிறுவனர் வீரமணி கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் மீது இதுவரை 15 -க்கும் மேற்பட்ட சிறுமிகள் புகார் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நியமித்துள்ளார். மேலும் வீரமணி வழக்கில் பொதுமக்கள் புகார் அளிக்க, தகவல் தெரிவிக்க 9345319676 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் மூலமாகவும் இந்த எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.
இந்த வழக்கில் வீரமணியின் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்ஹன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைக்குப் பின் நீதிபதி முக்கிய உத்தரவு பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Veeramani appears before the Chennai POCSO Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




