போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!

போக்சோ வீரமணி வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Veeramani

வீரமணி - கோப்புப்படம்

Published On :

போக்சோ வீரமணியின் வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் ஜெம் கிரானைட் நிறுவனர் வீரமணி கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் மீது தொடர்ந்து பல சிறுமிகள் புகாரளித்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நியமித்துள்ளார்.

இந்த வழக்கில் வீரமணிக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்பு பிரிவில் பெறப்பட்ட பென் டிரைவ்-ல் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி என்பவர் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரது வீட்டின் படுக்கையறையில் சிறுமி ஒருவருடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக பென் டிரைவ்-வில் பதிவாகியிருந்த வீடியோவில் வீரமணி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததின் அடிப்படையில், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஜெம் கிரானைட் தொழிலபதிர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டும் இவ்வழக்கில் வீரமணி சிறுமியிடம் ஆபாசமாக இருப்பது போன்ற மேலும் ஒரு வீடியோவை வைத்திருந்தது தொடர்பாக அதைப்பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத குற்றத்திற்காக கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு, மேற்படி நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவல்துறை இயக்குநர் / படைத் தலைவர், தமிழ்நாடு அவர்களின் உத்தரவின் பேரில் மேற்படி போக்சோ வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஜெம் வீரமணி மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கு 02.10.2026 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.

மேற்படி ஐந்து வழக்குகளில் புலன் விசாரனை மேற்கொண்டதில், ஜெம் கிரணைட் தொழிலபதிர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, ஜெம் கிரணைட் வீரமணியின் ஓட்டுநர்கள் 1.லாசர், 2.பார்த்திபன் மற்றும் 3.பாபு ஆகியோர் அடையாளம் காணப்பட்டு இன்று (05.10.2026) கைது செய்யப்பட்டனர்.

மேற்கண்ட ஐந்து வழக்குகளில் சம்பந்தபட்ட ஜெம் கிரானைட் தொழிலபதிர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஓட்டுநர்கள் லாசர் என்பவர் 23 வருடங்களாகவும், பாபு என்பவர் 8 வருடங்களாகவும் மற்றும் பார்த்திபன் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

ஜெம் வீரமணியின் குற்ற செயல்களுக்கு துணை போனது பற்றியும், அது தொடர்பாக அவர்களுடைய வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு, 8 செல்போன்கள் மற்றும் 55 ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Three more arrested in the POCSO Veeramani case!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.