ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

மனித உரிமை மீறல்! போக்சோ வீரமணி மகள் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

போக்சோ வீரமணி மகள் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...

Madras High Court

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

வெளிநாடு செல்லவிருந்த தன்னை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டதுடன், சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கக் கோரி வீரமணியின் மகள் அர்ச்சனா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள தனது மகனை காண விமானத்தில் பயணிக்க இருந்த வீரமணியின் மகள் அர்ச்சனாவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில், எந்தவொரு காரணமும் கூறாமல், விமானப் பணியாளர்கள் தன்னை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டதாகவும், அதன்பிறகு சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் தனக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வீரமணியின் மகள் அர்ச்சனா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், எந்தவொரு சம்மனும், நீதிமன்ற வாரண்ட்டும், லுக் அவுட் நோட்டீஸும் இல்லாமல் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தன்னை அழைத்துச் சென்றதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்தில் மயங்கி விழுந்துவிட்டதாகவும், பிறகு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அக்டோபர் 25-ஆம் தேதி ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். விசாரணையின்போது, என்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை திரும்பத் தர உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படாத அர்ச்சனாவை, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கழிப்பறையைக் கூட பயன்படுத்த அனுமதிக்காமல், நீண்ட நேரம் காத்திருக்க வைத்திருந்ததால், அவர் சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்திலேயே மயங்கி விழுந்ததாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல்துறை, விசாரணைக்கு சம்மன் கொடுக்க மனுதாரர் வீட்டுக்குச் சென்றபோது, அவர் இல்லாத காரணத்தால், வீட்டுக் காவலாளியிடம் சம்மன் கொடுக்கப்பட்டதாகவும், சம்மனை மனுதாரரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு போலீஸார் அனுப்பியதாகவும், அதன்பிறகு மனுதாரரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டதாகவும் தெரிவித்தார். மனுதாரர் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குச் சென்று விசாரணைக்கு அழைத்து வந்ததாகவும் கூறினார்.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Summary

Human rights violation! Police ordered to respond to a case filed by the daughter of POCSO Veeramani!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.