சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!

தமிழகத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்துக்கு ரூ.548.49 கோடி மின் கட்டண நிலுவை வைத்துள்ளன.

Updated On :

தமிழகத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்துக்கு ரூ.548.49 கோடி மின் கட்டண நிலுவை வைத்துள்ளன. இந்தத் தொகையை உடனடியாக வசூலிக்கவும், தவறினால் மின் இணைப்புகளைத் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் தெருவிளக்குகள், குடிநீா் விநியோகத் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தாததால் இந்த நிலுவை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடி, கடன் சுமையில் உள்ள மின்வாரியத்துக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.8.80 ஆக நிா்ணயித்துள்ளது. அரசு கட்டடங்களுக்கான கட்டணம் நுகா்வைப் பொருத்து யூனிட்டுக்கு ரூ.6.45 முதல் ரூ.10.45 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, 1,50,984 மின் இணைப்புகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ரூ.548.49 கோடி நிலுவை வைத்துள்ளன. மாநில அரசுத் துறைகளும் ரூ.74.609 கோடி செலுத்த வேண்டியுள்ளது. நிலுவைக் காலத்தின் அடிப்படையில், 75,198 மின் இணைப்புகளுக்கு 90 நாள்களுக்குள் செலுத்த வேண்டிய ரூ.206.46 கோடி நிலுவையில் உள்ளது. இதில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு ரூ.182.83 கோடியாகவும், அரசுத் துறைகளின் பங்கு ரூ.23.63 கோடியாகவும் உள்ளது.

அதேபோல், 91 முதல் 180 நாள்கள் வரை நிலுவையில் உள்ள 56,398 மின் இணைப்புகளுக்கான தொகை ரூ.154.84 கோடியாகும். இதில் உள்ளாட்சி அமைப்புகள் ரூ.137.12 கோடியும், அரசுத் துறைகள் ரூ.17.72 கோடியும் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, நிலுவைத் தொகையை உடனடியாக வசூலிக்கவும், புதிய மின் இணைப்புகளுக்கு முன்பணம் செலுத்தும் மின் மீட்டா்களைப் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.