திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்
திருவண்ணாமலை, சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளது குறித்து...

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப்படம்
திருவண்ணாமலை, சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியாக ரூ. 3 லட்சத்தை முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை (நவ. 10) அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பெண் குழந்தைகள் காப்பகத்தின் செவிலியர் தேன்மொழி (வயது 22) மற்றும் அக்காப்பகத்தில் தங்கியிருந்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் விஜயலட்சுமி (வயது 16), த/பெ. வெங்கடேஷ், அல்லி (வயது 14), த/பெ. வெங்கடேஷ், பூமிகா (வயது 13), த/பெ. வெங்கடேஷ் மற்றும் நெடுங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் (வயது 16), த/பெ. சேகர் ஆகியோர் நேற்று (நவ. 9) காப்பகத்தின் பின்புறமுள்ள சமுத்திரம் கிராம பெரிய ஏரியில் குளிப்பதற்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
Summary
On Tuesday (November 10), Chief Minister Vijay announced financial assistance of Rs. 3 lakh to the families of those who drowned and lost their lives in the Periya Lake at Samuthiram, Tiruvannamalai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

