அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி

அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என கேள்வி

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

கோவை மாவட்டத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தில் போலியான புத்தகங்கள் வைக்கப்பட்ட சம்பவத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், குற்றவாளி யார் என்று தெரியாவிட்டாலும், உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதி, இதுவரை வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது.

நூலகங்களுக்கு புத்தக கொள்முதல் தொடர்பான உத்தரவை முறைப்படி செயல்படுத்தவில்லை என்று கூறி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்க பரிந்துரைத்தது யார்? என்று கேள்வி எழுப்பியதோடு, அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனே முடக்க உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லையா என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, குற்றவாளி யார் எனத் தெரியாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டுமே என்று கேள்வி எழுப்பினர். மேலும், உடனடியாக வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக 2024ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை முறைப்படி செயல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், வங்கிக் கணக்கிலிலிருந்து யாருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Summary

Freeze the 'Agal Vilakku' bank account! Why hasn't a case been registered? – High Court Madurai Bench questions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.