ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவு...

cm vijay - udhayanithi stalin

தமிழக முதல்வர் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :

சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் முதல்வர்? என்று உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி அதற்கு பெண் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் இதற்கு பதில் அளித்திருந்தார்.

அதேநேரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக புகார் அளித்ததால் தன் மீது தவறான தகவல் பரப்புவதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கூறியுள்ளார்.

இதனிடையே இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் முதல்வர்?

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாசாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.

குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு. நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.

குற்றச்சம்பவங்களை மூடிமறைக்க, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி டைரியே போடலாம்.

தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று முதல்வரும், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று முதல்வர் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.

மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் அட்ராசிட்டியால் சாமானியர் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.

இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், ஸ்லீப் மோட் - இல் இருக்கும் முதல்வர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Summary

CM Vijay remains in sleep mode taking no responsibility for anything: Udhayanidhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.