மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணி
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவாகரத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம்
ஜோதிமணி - கோப்புப் படம்
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவாகரத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகி அது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்களும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களும் தவெக எம்எல்ஏவுக்கு எதிராக கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில்,
"கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
இச்சமூக ஊடக செய்திகள் உண்மையென்றால் முறையாக விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு பெண் தனது அறிவு, திறமை, உழைப்பு மூலம் எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும் இறுதியில் வெறும் பெண்ணாகவும், உடலாகவும் மட்டுமே பார்க்கின்ற இம்மாதிரியான மோசமான மனநிலையை நாம் நிச்சயமாக கடந்து போய்விட முடியாது.
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்களில் ஏறக்குறைய 50% பேர் பெண்கள். பெண்களின் உழைப்பு, திறமை, நிர்வாகத்திறன் மீது முதல்வருக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது.
ஆனால் இதுபோன்ற மோசமான செயல்கள் ஆட்சிக்கும் கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை. இதை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று கடும் கண்டனத்துடன் பதிவிட்டுள்ளார்.
à®à®³à¯à®³à®à¯à®à¯à®±à®¿à®à¯à®à®¿ மாவà®à¯à® à®à®à¯à®à®¿à®¯à®°à¯ à®à®µà®°à¯à®à®³à¯à®à¯à®à¯ த வ௠஠à®à®à¯à®à®®à®©à¯à®± à®à®±à¯à®ªà¯à®ªà®¿à®©à®°à¯ à®à®ªà®¾à® à®à¯à®±à¯à®à¯à®à¯à®¯à¯à®¤à®¿ à®à®©à¯à®ªà¯à®ªà®¿à®¯à®¤à®¾à®à®µà¯à®®à¯,நà¯à®°à®¿à®²à¯ à®à¯à®©à¯à®±à¯à®µà®¿à®°à¯à®®à¯à®ªà®¤à¯à®¤à®à®¾à®¤ à®®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ நà®à®¨à¯à®¤à¯à®à¯à®£à¯à®à®¤à®¾à®à®µà¯à®®à¯ à®à®¤à¯à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ à®à®³à¯à®³à®à¯à®à¯à®±à®¿à®à¯à®à®¿ மாவà®à¯à® à®à®à¯à®à®¿à®¯à®°à¯ à®®à¯à®±à¯à®ªà¯à®ªà®à®¿ பà¯à®à®¾à®°à¯ à®à®³à®¿à®¤à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à®¾à®à®µà¯à®®à¯ à®à®®à¯à® à®à®à®à®à¯à®à®³à®¿à®²à¯ à®à¯à®¯à¯à®¤à®¿à®à®³à¯ வரà¯à®à®¿à®©à¯à®±à®©.â¦
— Jothimani (@jothims) November 10, 2026
Summary
Obscene text message to Collector: Strict action needed against TVK MLA: Jothimani
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


