பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதல்! இருவர் பலி, 8 பேர் கவலைக்கிடம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 குறைந்தது! வெள்ளி விலையும் சரிவு! (நவ. 6)தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை! காவலில் எடுக்கப்படும் நபா் 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்நாட்டில் அராஜகத்தைப் பரப்பும் ராகுலுக்கு தக்க பதிலடி: அமித் ஷா உறுதி6 ஆண்டுகள் பணிபுரியும் அக்னிவீரா்கள் ராணுவத்தில் நிரந்தர வீரா்களாக்கப்படுவா்: பாதுகாப்புத் துறை அதிகாரிகள்வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கி ஆணைசீனாவின் சாதனையை முறியடிக்கும் ரயில் வழித்தடம்! ரூ. 1.31 லட்சம் கோடியில் அரசு திட்டம்!வானிலை: தமிழகத்தில் நாளை (நவ. 6) கனமழைக்கு வாய்ப்பு!தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம்: அதிமுக நிர்வாகி மன்னன் கைது

தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகி மன்னன் கைது செய்யப்பட்டது குறித்து...

தவெக எம்எல்ஏ முஸ்தபா | முன்னாள் துணை மேயர் மன்னன்

Updated On :

தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதிமுக நிர்வாகி மன்னன் கைது செய்யப்பட்டார்.

தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தன்னிடம் பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகியும் மதுரை மாநகர் முன்னாள் துணை மேயருமான மன்னன் மீது மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்க மன்னன் ரூ. 30 கோடி பேரம் பேசியதாக எம்எல்ஏ முஸ்தபா புகாரில் கூறியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் ரூ. 15 கோடியும், பின்னர் ரூ. 15 கோடியும் வழங்க மன்னன் முன்வந்ததாக முஸ்தபா கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவில் முஸ்தபா புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகி மன்னன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், மன்னனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Summary

Rs. 30 crore deal offered to TVK MLA Mustafa: AIADMK Mannan arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.