சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

சர்வதேச போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!

சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ரொனால்டோ அறிவிப்பு...

Portugal's Cristiano Ronaldo

உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு அழுத கிறிஸ்டியானோ ரொனால்டோ. - படம்: ஏபி

Updated On :

சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.

போா்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது தனித்துவமிக்கத் திறன்களால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் ரொனால்டோ, 2016 ஆம் ஆண்டு போர்ச்சுகல் அணிக்கு யூரோ கால்பந்து உலகக் கோப்பையை வென்று தந்தார். மேலும், இதுவரை 5 முறை பேலன் டி ஓர் விருதை அவர் பெற்றுள்ளார்.

சமீபத்தில், ரொனால்டோவுக்கு போர்ச்சுகல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜார்ஜி ஜீசஸ் மற்றும் மேலாளர் ஆகியோர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து அவர் தேசிய அணியின் பயிற்சி முகாமை விட்டு வெளியேறியது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இருப்பினும், போர்ச்சுகல் அணிக்காக விளையாடத் தயாராக இருப்பதாகக் கூறிய ரொனால்டோ, நடைபெறவுள்ள நேஷனல் லீக் போட்டியின் முதல்கட்ட அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

இந்த போட்டிகளுக்கான வீரர்களின் இறுதிக்கட்டப் பட்டியல் நாளை வெளியாவிருக்கும் நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ரொனால்டோ இன்று (நவ. 5) அறிவித்துள்ளார்.

இதுவரை 985 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ உலகக் கால்பந்தாட்ட வரலாற்றில் 1,000 கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை எட்டுவதற்கு வெறும் 15 கோல்கள் மட்டுமே தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Star player Ronaldo has announced his retirement from international football.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.