ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!
ஆந்திரத்தில் தமிழக மீனவர்கள் 9 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது பற்றி...

கோப்புப்படம் - PTI
தமிழ்நாட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் மாயமான நிலையில், அவர்களின் சடலங்கள் ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன.
சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த அக். 29 அன்று 9 மீனவர்கள் விசைப்படகில் நடுகடலுக்கு மின்பிடிக்கச் சென்றுள்ளனர். அந்த படகில், காசிமேட்டைச் சேர்ந்த படகு ஓட்டுநர் சூர்யா 49, குப்பன் 48, மோகன் 47, ராஜேஷ் 52, முருகன் 48, குப்புசாமி 58, விஜயகாந்த் 44, அரவிந்த் 40 மற்றும் கடலூரைச் சேர்ந்த நாராயணனை 57 ஆகியோர் கடலுக்குச் சென்றனர்.
முரசு புயல் தொடர்பாக அவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஆந்திரத்தின் நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் படகை பாதுகாப்பாக நிறுத்தினர். பின்னர், நவ. 2 அன்று ஆந்திரத்தின் ராமாயப்பட்டினம் துறைமுகம் நோக்கி புறப்பட்டுள்ளனர்.
அப்போது அவர்களின் விசைப்படகின் என்ஜின் பழுதான நிலையில், இதுதொடர்பாக ஆந்திர கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பரின் படகிலுள்ள வாக்கி டாக்கிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பிறகு காசிமேடு மீனவர்கள் சென்ற படகிலிருந்து எந்த தகவலும் கிடைக்காததை தொடர்ந்து, படகின் உரிமையாளர் செல்வழகன், காசிமேடு மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் தகவல் கொடுத்தார். உடனடியாக இந்திய கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கோத்தப்பட்டினம் அருகே 9 மீனவர்களின் சடலங்கள் இன்று கரை ஒதுங்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.
மேலும், தமிழக மீனவர்கள் 9 பேர் சடலமாக மீட்கப்பட்ட தகவல் அறிந்தவுடன் காசிமேடு பகுதி மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
Summary
Bodies of 9 Tamil Nadu fishermen wash ashore in Andhra Pradesh!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


