
தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை: ராமேசுவர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ராமேசுவர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து...

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 ராமேசுவரம் மீனவா்கள். - DNS
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 399 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை (அக். 3) மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த புரோகா் என்பவரது விசைப் படகை பறிமுதல் செய்தனா்.
மேலும், இந்தப் படகிலிருந்த எபிஸ்டன் (29), மத்தியா (22), ஜான்ஜெய்சன் (25), ஸ்டிவன்சன்(23), சுபாா்டன் (25), அபிஸ்ன் (27), மோபிஸ் (21), அந்தோணி பிரதீப் (26), அந்தோணி புருடஸ் (42) ஆகிய 9 மீனவா்களைக் கைது செய்து, காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து, 9 மீனவா்கள் மீதும் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 9 மீனவா்களையும் வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, அவர்களையும் விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவர விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Rameswaram fishermen go on indefinite strike to protest the detention of Tamil Nadu fishermen
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






