மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை
மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தியது பற்றி...

முதல்வர் விஜய்.
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இயற்கைப் பேரிடர்களால் கடலில் காணாமல்போவது மற்றும் உயிரிழப்பு போன்ற இன்னல்களைச் சந்திக்க நேரிடுவது தொடர்பாகவும், தற்போது வடகிழக்கு பருவமழைக் காலமாக உள்ளதால், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஏற்படக்கூடிய புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகளின்போது, கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பாகவும் ஆய்வுக்கூட்டம் முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், புயல் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகளின்போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும், மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் கடலில் இடர்ப்பாடுகளைச் சந்திக்கும் அவசர காலங்களில், மீனவர்கள் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், கடலில் மீனவர்களின் தகவல் தொடர்புக் கருவிகளை மேம்படுத்துதல், படகு மற்றும் அதன் இயந்திரங்கள் கடலில் செல்லத்தக்க வகையில் இருப்பதை உறுதிசெய்தல், இவை தொடர்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துதல் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது காணாமல் போகும் நேர்வில், கடல்வள சட்ட அமலாக்கப் பிரிவு, கடலோர காவல் குழுமம், இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் இந்தியக் கப்பற்படை போன்ற பல்வேறு அமைப்புகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையுடன் ஒருங்கிணைந்து, விரைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
A review meeting regarding ensuring the safety of fishermen when they go out to sea for fishing was held under the leadership of Chief Minister C. Joseph Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


