பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தது பற்றி...

பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ

பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ - video grab

Updated On :

பெங்களூரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, இளஞ்சிவப்பு மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

பெங்களூர் நகரில் மெட்ரோவின் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற உயா்நிலை வழித்தடத்தில் 7.5 கி.மீ. தொலைவுக்கான ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்துள்ளார். இந்த பாதையில் நவ.14-ஆம் தேதி காலை 6 மணி முதல் மக்களுக்கான ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

முன்னதாக, பெங்களூரில் இன்று மதியம் நடைபெற்ற விழாவில் புதிய வழித்தடத்தை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்துள்ளார். இந்த விழாவில் முதல்வா் டி.கே. சிவகுமாா், ஆளுநா் சுதா யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனர்.

கலேனா அக்ரஹாரா முதல் தாவரேகெரே, சுத்தகுண்டேபாளையா வழியாக செல்லும் இந்த வழித்தடம், ஜெயதேவா மருத்துவமனை மெட்ரோ நிலையத்தில் எலக்ட்ரானிக் சிட்டி பாதையுடன் இணைகிறது. இதனால் பன்னா்கட்டா சாலையில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி, எச்எஸ்ஆா் லேஅவுட், ஜெயநகா், ஒயிட்ஃபீல்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்க முடியும்.

இந்த வழித்தடத்தில் முதலில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும் வகையில் 5 ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 ரயில்கள் சேவையிலும், ஒன்று தயாா்நிலையிலும் இருக்கும். இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் பெங்களூரு மெட்ரோவின் மொத்த நீளம் சுமாா் 103 கி.மீ. ஆக அதிகரித்து, 100 கி.மீ. இலக்கை கடக்கும்.

இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தில் 7.5 கி.மீ. உயா்நிலை வழித்தடமும், 13.7 கி.மீ. சுரங்க வழித்தடமும் அமையப்பெற்றுள்ளது.

அடுத்த 18 மாதங்களில் மெட்ரோ வழித்தடத்தின் நீளத்தை 170 கி.மீ.க்கும் அதிகமாக உயா்த்த அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. நீண்டகால இலக்காக 400 முதல் 500 கி.மீ. வரை மெட்ரோ வலையமைப்பை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Prime Minister Modi inaugurated the pink metro line in Bengaluru!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.