
முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பது பற்றி...

கோப்புப்படம்
பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை அக்.11ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் விஜய் முன்னிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். விழாவில் பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்டத்தில் 118.9 கி.மீ. தூரத்தில் 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரை 14.64 கி.மீ. வழித்தடமாக பயணிகள் சேவைக்குத் தயார் நிலையில் உள்ளது.
பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 11 உயர்மட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த மெட்ரோ சேவை பயன்பாட்டுக்கு வந்தால் பூந்தமல்லி முதல் போரூர், வடபழனி வரை போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
Summary
Prime Minister Modi to inaugurate the Poonamallee-Vadapalani Metro Rail project on October 11.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





