பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்போல் வால்ட் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்!ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறை

பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது என்ற தடை பற்றிய வரைவு விதிமுறை வைரலாகியிருக்கிறது.

FSSAI proposes draft amendment to ensure only milk-derived products are represented as 'Paneer'

பனீர் என பெயரிடக் கூடாது

Published On :

பால் அல்லாத மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் பொருள்களுக்கு பனீர் என்ற பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய உணவுக் கட்டுப்பாட்டு தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட வரைவு விதிமுறை இணையத்தில் வைரலாகியுள்ளது.

பாலில் இருந்து பெறப்படாத மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் செயற்கை பனீர், பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படக் கூடாது, நுகர்வோர் செயற்கையான பனீரை அடையாளம் காணும் வகையில் இந்த விதிமுறை கொண்டுவரப்படுகிறதாம்.

செயற்கையாக தயாரிக்கப்படும் பனீர் மற்றும் சீஸ் பொருள்கள், நுகர்வோரை தவறாக வழிநடத்துவதை தடுக்கும் நோக்கில், ஒருவர் வாங்கும் பொருளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த அறிவிப்பை இந்திய உணவுக் கட்டுப்பாட்டு தர நிர்ணய ஆணையம் கூறியிருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளது.

ஆனால், இந்த அறிவிப்பு உணவு வணிகத்தில் உள்ள நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றை வெகுவாக பாதிக்கும் என்றும், அவர்கள் பாலில் தயாரிக்கப்பட்ட பனீர் அல்லது சீஸ் என்று விளம்பரப்படுத்தும் நிலை ஏற்படும் எனக் கூறப்பட்டது.

இந்திய உணவுக் கட்டுப்பாட்டு தர நிர்ணய ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரஜித் புன்ஹானி, செப்டம்பர் 22-ஆம் தேதி வெளியிட்ட 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனை மீதான தடை மற்றும் கட்டுப்பாடுகள்) திருத்த விதிகள், 2026, உண்மையில் செயற்கையாக தயாரிக்கப்படும் பனீர் மற்றும் சீஸ் போன்றவற்றுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கவில்லை; மாறாக, பால் அல்லாத பிற பொருள்களால் ஆன என்ற பிரிவின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தயாரிப்புகள், தங்கள் பெயர், லேபிளிங் அல்லது சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் பனீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை மட்டுமே இவை தடை செய்கின்றன என்று கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கை மீது மக்களின் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு 60 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனித உடலுக்கு தீங்கிழைக்கும் செயற்கையான பனீரை விற்பனை செய்வதைத் தடுக்காமல் பனீர் என்று விற்பனை செய்வதைத் தடுக்க விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறதே என்று மக்கள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.