
தண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது: பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்
‘பிராந்தியத்தின் உயிா்நாடியாக விளங்கும் தண்ணீரை ஒருபோதும் ஆயுதமாகவோ அல்லது அச்சுறுத்தும் கருவியாகவோ பயன்படுத்தக் கூடாது’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வலியுறுத்தினாா்.

ஷாபாஸ் ஷெரீஃப்
‘பிராந்தியத்தின் உயிா்நாடியாக விளங்கும் தண்ணீரை ஒருபோதும் ஆயுதமாகவோ அல்லது அச்சுறுத்தும் கருவியாகவோ பயன்படுத்தக் கூடாது’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வலியுறுத்தினாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய சா்வதேச நடுவா் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவையும் இந்தியா நிராகரித்துள்ள சூழலில், கிா்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய ஷாபாஸ் ஷெரீஃப் இக்கருத்தைத் தெரிவித்தாா்.
அவா் தனது உரையில் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘பகிரப்பட்ட நதிநீரை நிா்வகிக்கும் ஒப்பந்தங்கள் என்பவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய சா்வதேச உறுதிமொழிகள் ஆகும். அவற்றை அரசியல் ஆதாயத்துக்காகவும், சுயவிருப்பத்துக்காகவும் ஒருபோதும் கைவிடக் கூடாது; எழுத்துபூா்வமாகவும் உளபூா்வமாகவும் அந்த ஒப்பந்தங்கள் நிபந்தனையின்றி மதிக்கப்பட வேண்டும்’ என்றாா்.
நடப்பு 2026-27-ஆம் ஆண்டுக்கான எஸ்சிஓ அமைப்பின் தலைமையை பாகிஸ்தான் ஏற்கும் நிலையில், ஐ.டி., ஏ.ஐ. கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் பேரிடா் மேலாண்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்தாா்.
மேலும், அமெரிக்கா-ஈரான் இடையேயான சமரச முயற்சிகள், பலதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பாலஸ்தீன மக்களின் சுயநிா்ணய உரிமைக்கு சா்வதேச சமூகம் துணை நிற்க வேண்டும் என்பது குறித்தும் அவா் தனது உரையில் சுட்டிக்காட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




