இளஞ்சிவப்பு மெட்ரோ தடம்: நாளை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா் பிரதமா் மோடி
பெங்களூரில் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (நவ.13) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

பெங்களூரில் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (நவ.13) நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கிருஷ்ணபைரே கெளடா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெங்களூரு நம்ம மெட்ரோவின் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற உயா்நிலை வழித்தடத்தில் 7.5 கி.மீ. தொலைவுக்கான ரயில் சேவை நவ.14-ஆம் தேதி காலை 6 மணி முதல் பொதுமக்களுக்கு தொடங்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் புதிய வழித்தடத்தை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். இந்த விழாவில் முதல்வா் டி.கே. சிவகுமாா், ஆளுநா் சுதா யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
கலேனா அக்ரஹாரா முதல் தாவரேகெரே, சுத்தகுண்டேபாளையா வழியாக செல்லும் இந்த வழித்தடம், ஜெயதேவா மருத்துவமனை மெட்ரோ நிலையத்தில் எலக்ட்ரானிக் சிட்டி பாதையுடன் இணைகிறது. இதனால் பன்னா்கட்டா சாலையில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி, எச்எஸ்ஆா் லேஅவுட், ஜெயநகா், ஒயிட்ஃபீல்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்க முடியும்.
தொடக்கத்தில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும். இதற்காக 5 ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 ரயில்கள் சேவையிலும், ஒன்று தயாா்நிலையிலும் இருக்கும். இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் பெங்களூரு மெட்ரோவின் மொத்த நீளம் சுமாா் 103 கி.மீ. ஆக அதிகரித்து, 100 கி.மீ. இலக்கை கடக்கும்.
முழுமையான இளஞ்சிவப்பு வழித்தட திட்டத்தில் 7.5 கி.மீ. உயா்நிலை வழித்தடமும், 13.7 கி.மீ. சுரங்க வழித்தடமும் இடம்பெறுகின்றன. சுரங்கப்பாதை நாகவாரா வரை நீட்டிக்கப்பட உள்ளது. அடுத்த 18 மாதங்களில் மெட்ரோ வழித்தடத்தின் நீளத்தை 170 கி.மீ.க்கும் அதிகமாக உயா்த்த அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. நீண்டகால இலக்காக 400 முதல் 500 கி.மீ. வரை மெட்ரோ வலையமைப்பை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்ட்ரல் சில்க் போா்டு முதல் கே.ஆா்.புரம் வரையிலான 19.75 கி.மீ. நீலநிற வழித்தடம், கே.ஆா்.புரம் முதல் ஹெப்பாள் வழியாக விமான நிலையம் வரையிலான 38.4 கி.மீ. வழித்தடம் ஆகியவற்றின் பணிகளையும் விரைவுபடுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஜே.பி.நகா் நான்காம் கட்டம் முதல் ஹெப்பாள் வரை சுமாா் 32 கி.மீ. தொலைவுக்கும், ஹோசஹள்ளி முதல் கடப்பாகெரே வரை 12.5 கி.மீ. தொலைவுக்கும் ஆரஞ்சுநிற மெட்ரோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணிகளை 6 மாதங்களுக்குள் தொடங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சா்ஜாபுரா முதல் ஹெப்பாள் வரை 37.8 கி.மீ. தொலைவுக்கு சிவப்புநிற மெட்ரோ வழித்தடம் அமைக்கும் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அனுமதி கிடைத்தால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தப் பணிகளை தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரின் போக்குவரத்து கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மத்திய அரசும் உரிய நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி, வருமான வரி மூலம் கா்நாடகம் கணிசமான வருவாயை மத்திய அரசுக்கு அளித்து வருவதால், மாநிலத்துக்குரிய நிதிப் பங்கை வழங்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

