ஜகதீப் தன்கருக்கு உடல்நலக் குறைவு! தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் நடைபயிற்சியின் போது மயக்கமடைந்தது குறித்து...

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் - கோப்புப் படம் | PTI
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் திடீர் உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் புதன்கிழமை (நவ. 11) காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜகதீப் தன்கரை அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவருக்கு எய்ம்ஸ் மருத்துவர் சந்தீப் செத் பரிசோதனைகள் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜகதீப் தன்கர் அழைத்துச் செல்லப்பட்டு, இதய - நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜகதீப் தன்கருக்கு எய்ம்ஸ் மருத்துவர்களின் சிறப்புக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, இந்தியாவின் 14 ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஜகதீப் தன்கர், கடந்த 2025 ஆம் ஆண்டு தனது பதவிக்காலம் நிறைவடையும் முன்னரே பதவி விலகினார்.
ஏற்கெனவே, கடந்த 2025 மார்ச் மாதம் நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தன்கருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
former Vice President Jagdeep Dhankhar has been admitted to AIIMS Hospital in Delhi due to a sudden health issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


