தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: கூடுதலாக தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணத்தொகை அறிவிப்பு.

சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் - படம்: டிஐபிஆர்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அந்தக் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ. 5.25 கோடி வழங்க முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் 22.05.2018 மற்றும் 23.05.2018 ஆகிய நாள்களில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 25 லட்சமும் மற்றும் கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்குத் தலா ரூ. 5 லட்சமும் நிவாரண நிதியாக ஏற்கெனவே வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் வழங்கிடக் கோரி முதல்வரிடம் முறையிட்டதன்பேரில், அதனைக் கனிவுடன் பரிசீலனை செய்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ. 50 லட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ. 25 இலட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ. 25 லட்சம் வீதம் ரூ. 3.25 கோடியும், கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ. 10 லட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ. 5 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ .2 கோடியும் என மொத்தம் ரூ. 5.25 கோடி கூடுதல் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆணையிட்டுள்ளார்.
Summary
Responding to the requests of families affected by the protests against the Sterlite plant in Thoothukudi, Chief Minister C. Joseph Vijay has ordered the disbursement of an additional Rs. 5.25 crore as relief to these families.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


