கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு...
மாணிக்கம் தாகூர் - TN Congress
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:
”வாட்ஸ்ஆப் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாட்ஸ் ஆப்பில் பொய்யாக பரப்பப்படும் செய்தியை அனைவரையும் பகிர்ந்து மீடியா விசாரணையெல்லாம் நடக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல்முறை எம்.எல்.ஏ.வான அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் பாவமாக எனது போனை பாருங்கள், சிசிடிவி பாருங்கள் எனக் கூறுகிறார்.
அவர் மீது மீடியா விசாரணை நடத்துவது நியாயமாக இல்லை. இதுதொடர்பான குற்றச்சாட்டை எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். தவறு நடந்திருந்தால் விசாரிக்கலாம். ஆனால், தவறே நடக்காமல் வாட்ஸ்ஆப் செய்தியை வைத்து குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட இதற்கு எதிர்வினையாற்றிவிட்டார்கள்.
சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரே விளக்கம் அளித்துவிட்டார். மீண்டும் இதைப் பற்றி பேசுவது நியாயம் கிடையாது.
உதயநிதி ஸ்டாலின் பேசுனது அயோக்கியதனமான, அருவருப்பான பேச்சு. அதுமாதிரி எம்.எல்.ஏ. பேசியதற்கு ஆதாரம் இருக்கிறதா? இல்லாத ஒன்றையும் இருக்கிற ஒன்றையும் ஒப்பிட்டு பேசுவது தவறானது” எனத் தெரிவித்தார்.
Summary
Kallakurichi MLA Arul Vignesh—poor guy! —Manickam Tagore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


