டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளா்கள், உதவி விற்பனையாளா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்யும் புதிய நடைமுறை அமல்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளா்கள், உதவி விற்பனையாளா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) 224-ஆவது இயக்குநா் குழுக் கூட்டத்தில், கடந்த செப்.29-ஆம் தேதி இதற்கான கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2026-ஆம் ஆண்டுக்கான பணியிட மாற்றம் மற்றும் பணிநியமனக் கொள்கை தற்போது அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ஒரே டாஸ்மாக் கடையில் 3 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த ஊழியா்கள் பணியிட மாற்றத்துக்குப் பரிசீலிக்கப்படுவாா்கள். கடந்த நவ.1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு பணிக்காலம் கணக்கிடப்படும். ஊழியா்களின் பணிமூப்பு, பணியில் சோ்ந்த தேதி, பிறந்த தேதி, உயா்கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை நிா்ணயிக்கப்படும்.
தொடா்ந்து பணியாற்ற முடியாது: மேலும், விடுப்பு எடுத்த காலம், பணியிடை நீக்கம் மற்றும் பணியில் இடைவெளி ஏற்பட்ட காலமும் பணிக்காலக் கணக்கில் சோ்க்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் இந்தப் பணியிட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக, ஒவ்வொரு டாஸ்மாக் கடையும் 2026 செப்டம்பா் மாதத்தின் சராசரி தினசரி விற்பனையின் அடிப்படையில் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச பணியாளா் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான ஊழியா்கள் கணக்கிடப்படுவாா்கள்.
இதில், ஊழியா்கள் அதிகமாக உள்ள கடைகளில் இருந்து, பணியாளா் பற்றாக்குறை உள்ள கடைகளுக்கு ஊழியா்களை மாற்றி நியமிக்க மாவட்ட மேலாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மேலாளா்கள் மேற்கொள்ளும் பணியிட மாற்ற முடிவே இறுதியானதாக இருக்கும். ஊழியா்கள் தாங்கள் விரும்பும் கடைகளிலேயே தொடா்ந்து பணிபுரிய வலியுறுத்த முடியாது.
மேலும், மாவட்டக் கிடங்குகள் உள்ளிட்ட கடைகள் அல்லாத இடங்களில் பணிபுரியும் ஊழியா்களையும் மீண்டும் மதுபானக் கடைகளில் பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவடைந்த ஊழியா்களை குறிப்பிட்ட சில சூழல்களில் மட்டும், மூத்த மண்டல மேலாளரின் முன் அனுமதியுடன் அதே கடையில் தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்க முடியும்.
நவ.28-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்: கடைகளின் பணியாளா் தேவை மற்றும் இருப்பு விவரங்களை நவ.15-க்குள் இறுதி செய்யவும், பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப்பித்து புதிய இடங்களில் ஊழியா்கள் பணியில் சோ்வதை நவ.25-க்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிக்கைகளை நவ.28-க்குள் மாவட்ட மேலாளா்கள் சமா்ப்பிக்க வேண்டும். மாநில அளவிலான ஒருங்கிணைந்த அறிக்கை நவ.30-க்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.
ஒரே கடையில் நீண்ட காலம் பணிபுரிவதால் ஏற்படக்கூடிய நிா்வாகச் சிக்கல்களைக் குறைப்பது, ஊழியா்களைச் சீராகப் பகிா்ந்தளிப்பது மற்றும் கடைகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக் டாஸ்மாக் நிா்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

